Sunday, May 27, 2012

இலங்கையின் சனத்தொகை 20.2 மில்லியன்கள்
                                                               [ ஞாயிற்றுக்கிழமை, 27 மே]
 நாடளாவிய ரீதியில் 30 வருடங்களுக்கு பின்னர் மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பின்படி இலங்கையின் சனத்தொகை 20.2 மில்லியன் என்று தெரியவந்துள்ளது.
இந்த தரவினை உத்தியோகபூர்வ தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன
இதன்படி 14.9 மில்லியன் மக்கள் சிங்களவர்கள் என்று தெரியவந்துள்ளது.
வருடந்தோறும் சனத்தொகையில் 220 ஆயிரம் பேர் அதிகரித்து வருகின்றனர்.
இந்தநிலையில் 2041 ஆம் ஆண்டில் இலங்கையில்  மொத்த சன்த்தொகை 24 மில்லியன்களாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் தற்போதைய சனத்தொகை 997,754 பேராகும் இதில் 934,392 பேர் தமிழர்களாவர். 21,860 பேர் சிங்களவர்கள். 32,659 பேர் முஸ்லிம்களாவர்.
இந்தக்கணக்கெடுப்பின்படி முஸ்லிம்களின் சன்தொகையின் மூன்றில் ஒரு பங்கினர் வடக்கு கிழக்கிலேயே வசிக்கின்றனர். இதில் கிழக்கிலேயே அதிக முஸ்லிம்கள் வசிக்கின்றனர்.
இந்தநிலையில் கிழக்கில் தமிழ் சிங்கள மற்றும் முஸ்லிம்களின்  சனத்தொகை சமமாகவே உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
இதேவேளை இந்த சனததொகை கணக்கெடுப்பு அறிக்கை இறுதிப்படுத்தப்பட்டு அது ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளதாக இலங்கை புள்ளிவிபரத்திணைக்களம் தெரிவித்துள்ளது
இதன்பின்னர், அது மூன்று பிரிவுகளாக வெளியிடப்படவுள்ளன
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் 14ஆவது தேசிய மாநாடு கோலாகலமாக ஆரம்பமானது.
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் 14ஆவது தேசிய மாநாடு மட்டக்களப்பில்  ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு மேளவாத்தியம் முழங்க கோலாகலமாக ஆரம்பமானது.
கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா உள்ளிட்ட அதிதிகள் அழைத்து வரப்பட்டனர்.
அதனையடுத்து மாநாட்டின் ஆரம்பிப்பையொட்டி சம்பந்தன் கட்சிக் கொடியினை ஏற்றிவைத்து அரம்பித்து வைத்தார்.
அதனையடுத்து சிவஸ்ரீ சாம்பசிவக் குருக்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கீதத்தினை இசைத்தார்.
இதனைத் தொடர்ந்து இதுவரை காலமும் போராட்டங்கள் மற்றும் இயற்கை அனர்த்தங்களில் உயிர்நீத்த தமிழ் உறவுகளுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி மங்கல விளக்கேற்றலையடுத்து தந்தை செல்வாவின் படத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் சிரேஸ்ட உபதலைவருமான பொன் செல்வராசா மாலை அணிவித்தார்.
அதனையடுத்து மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியில் இருந்து மரணமடைந்த பாராளுமன்ற உறுப்பினர்கள். கட்சிப் பிரமுகர்கள் தமிழரசுக் கட்சித் தலைவர்களுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
கலாசார நடனத்தைத் தொடர்ந்து மதத்தலைவர்களின் ஆசிகளுடன் மாநாடு தற்போது நடைபெற்று வருகிறது........

(thanks TW)