Monday, May 28, 2012

மட்டக்களப்பில் பிரபல வர்த்தகர் தனக்குத் தானே தீ மூட்டி தற்கொலை
[ திங்கட்கிழமை, 28 மே 2012]
ட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எருவில் வடக்கைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் ஒருவர் தனக்கு தானே தீ மூட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நேற்று அதிகாலை 4 மணியளவில், 48 வயதான ப. அருணகிரி என்ற பிரபல வர்த்தகரே வீட்டிற்கு வெளியே தனக்குத் தானே மண்ணெய்யை ஊற்றி தீ மூட்டியுள்ளார்.உயிருக்காக போராடிக் கொண்டிருந்தவரை உறவினர்கள் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்து, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இவர் இறப்பதற்கு முன்னர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைத்து பொலிசாருக்கு வாக்கு மூலம் அளித்துள்ளார். சம்பவம் நடந்த இடத்தைப் பார்வையிட்ட களுவாஞ்சிக்குடி பொலிசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
வடக்கு பகுதியை தமிழர்களின் பகுதி என சொல்லவே முடியாது - கோத்தபாய
[ திங்கட்கிழமை, 28 மே 2012,  ]
பிரிவினைவாத போர் இடம்பெற்ற இலங்கையின் வட பகுதியை பெருமளவில் தமிழர்கள் வாழும் பிரதேசமாக கருத முடியாது என பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். பீபீசி செய்திச் சேவைக்கு வழங்கியுள்ள விசேட பேட்டியிலேயே பாதுகாப்புச் செயலாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கை இறுதிக் கட்ட யுத்தத்தில் இடம்பெற்ற பொது மக்கள் உயிரிழப்பு மிகவும் குறைந்தளவானதே என பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
"யுத்தத்தின் போதும் யுத்தத்தின் பின்னரும் நாட்டின் பல பாகங்களில் தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள் தொழில் புரிகின்றனர். கொழும்பில், தெற்கில் தமிழர்கள் பணிபுரிகின்றனர். முஸ்லிம்கள், சிங்களவர்கள் வடக்கில் பணிபுரிய முடியும்". என பாதுகாப்புச் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
வடக்கு தமிழர்களை அதிகமாகக் கொண்ட பகுதி என கூறமுடியுமா?
"ஏன் அப்படி கருத வேண்டும்? நான் ஹம்பாந்தோட்டையில் இருந்து வந்தவன். நான் சிறுவயதில் அங்கு ஒரு தமிழ் குடும்பத்தை பார்த்ததில்லை. ஆனால் இன்று அங்கு பல தமிழ் குடும்பங்கள் வாழ்கின்றன. அப்படியானால் ஏன் அந்த நிகழ்வு வடக்கில் இடம்பெறக்கூடாது? நீங்கள் ஒரு இலங்கை பிரஜையாக இருந்தால் நாட்டின் வேண்டிய இடத்திற்குச் செல்ல, சொத்துக்களை கொள்வனவு செய்ய சுதந்திரம் இருக்க வேண்டும். இலங்கையர் நாட்டின் எந்த பகுதியிலும் வாழலாம் என்ற சுதந்திரத்தைப் பற்றியே நான் பேசுகின்றேன்". என பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் இடம்பெற்று வரும் கடத்தல்கள் குறித்து என்ன கருதுகின்றீர்கள்?
"அங்கே இருக்கின்ற சில பாதாள உலகக் குழுவினர் இந்த குற்றச்செயல்களை புரிகின்றனர். போதைப் பொருள் விநியோகத்தர்கள் பல குற்றங்களை செய்கின்றனர். இவர்கள் தப்பிச் செல்கின்றனர். இவர்களுக்கு இந்தியாவிற்குச் செல்வது மிகவும் இலகு. எனவே தவறான குற்றச்சாட்டுக்களை முன்வைக்க வேண்டாம்". என்று பதிலளித்தார்.எனினும் "இவைகள் தவறான குற்றச்சாட்டுக்கள் அல்ல. நான் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து தகவல் பெற்றுள்ளேன்" என பீபீசி ஊடகவியலாளர் கூறினார்.அப்போது "கோவப்பட வேண்டாம். வழமையாக நான்தான் கோவப்பட வேண்டும். ஆகவே நீங்கள் கோவப்பட வேண்டாம். நான்தான் பாதுகாப்புச் செயலாளர் நான் இதுகுறித்து விசாரணை நடத்தியுள்ளேன். நீங்கள் அவர்களிடம் இருந்து தகவல் பெற வேண்டாம். என்னிடம் தகவல் கேளுங்கள். அவைகள் பொய். நாட்டுக்கு வெளியில் மறைந்திருக்கும் புலி ஆதரவாளர்கள் இலங்கையின் நற்பெயருக்கு அபகீர்த்தி ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்" என பாதுகாப்புச் செயலாளர் பதிலளித்தார்.
இறுதிக் கட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் கொள்ளப்பட்டதாக ஐநா பிரதானி, மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சுமத்துகின்றமை பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?
"நாங்கள் அதுகுறித்து உத்தியோகபூர்வமாக செயற்பட்டுள்ளோம். வடக்கில் பொது மக்கள் பாதிப்பு குறித்து அனேக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன". என பாதுகாப்புச் செயலாளர் பதிலளித்தார்.
இலங்கை அதற்கு என்ன செய்திருக்கிறது?
அதற்குப் பதிலளித்த பாதுகாப்புச் செயலாளர், "நாங்கள் நிறைய செய்திருக்கிறோம். புள்ளிவிபரத் திணைக்களம் இந்த பகுதிகளில் கணக்கெடுப்பு செய்துள்ளனர். இதில் நூறு வீத தமிழ் அலுவலகர்கள் ஈடுபட்டனர்". என்றார்.அதில் 8 அல்லது 9 ஆயிரம் சிவிலியன்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?
"தவறான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம். சிவிலியன்கள் அல்ல. இலங்கை இராணுவத்திற்கும் சிவிலியன்களுக்கும் இடையில் யுத்தம் இடம்பெற்றது என நீங்கள் நினைக்கிறீர்களா? அது இராணுவத்திற்கு நிகராக ஆயுதம் தாங்கிய குழுவுடன்தான் மோதல் இடம்பெற்றது. இறந்தவர்கள் சிவிலியன்கள் என்றால் ஆயுதம் ஏந்தியவர்கள் எங்கே..?" என பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ் பீபீசி ஊடகவியலாளரிடம் இறுதியில் கேள்வி எழுப்பியுள்ளார்.

Sunday, May 27, 2012

நீதானே என் பொன் வசந்தம்
ஜீவாவால் ஒரு குடுமிப்பிடி

யாரோ வெட்டிப்போட்ட முள்ளு யாரு காலிலேயோ ஏறுன மாதிரி ஆகிடும் போலிருக்கு ஜீவா-கவுதம் மேனனுக்கு வந்திருக்கும் Neethane En Ponvasanthamபுது சிக்கல். பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி பல வருடங்களுக்கு பிறகு தயாரித்த படம்தான் ரவுத்திரம். இப்படத்தின் ரிசல்ட் அநேகமாக வாசகர்கள் அறிந்ததுதான். அப்போதே இப்படத்தின் நஷ்ட ஈடு கேட்டு நச்சரிக்க ஆரம்பித்தார்கள் விநியோகஸ்தர்கள். இப்படத்தால் சுமார் 68 லட்சம் நஷ்டம் என்பது இவர்கள் தரப்பு வாதம்.
விநியோக சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு படத்தை வாங்கும் இவர்கள் படம் ஓடாவிட்டால் எந்த முறையில் படத்தை வாங்கினோம் என்பதையெல்லாம் பார்க்காமல் தயாரிப்பாளரை குடைவது வாடிக்கையாகிவிட்டது. சவுத்ரியையும் இவர்கள் விடவில்லை. தொடர்ந்து நச்சரித்துக் கொண்டேயிருந்தார்கள்.
எம்.ஜி.என்ற முறையில்தான் படத்தை வாங்கியிருக்கிறீர்கள். ஓடாவிட்டால் பணத்தை திருப்பி தர வேண்டியது இல்லை என்று அவர் பதிலளித்த போதும் விடாமல் தொல்லை தந்த விநியோகஸ்தர்கள் இப்போது ஜீவாவின் 'நீதானே என் பொன் வசந்தம்' படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் முடக்க நினைக்கிறார்களாம்.
இரு படங்களுக்கும் வேறு வேறு தயாரிப்பாளர்கள் என்பதால் ஒரு குடுமிப்பிடிக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது கோடம்பாக்கம்.
நயன்தாராவின் நஷ்டக்கணக்கு
பதினைஞ்சு கோடி போயிருக்கும்.... ?

நோயே அண்டாமல் இருக்கணும்னா, நயன்தாரா வாயை கிண்டாமலிருக்க வேண்டும் Nayantharaஎன்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம் மாஸ்டர். முதலில் இதயத்தை மட்டுமே பரிமாறிக் கொண்ட இருவருக்கும் நடுவில் பிற்பாடு ஏராளமான கொடுக்கல் வாங்கல்கள் சமாச்சாரங்கள் இருக்கிறதாம்.
பச்சை குத்திக் கொள்கிற அளவுக்கு காதல் கன்பாஃர்ம் ஆனபின் நயன்தாரா வாங்கிய எல்லா செக்கிலும் மாஸ்டரின் பெயரைதான் போட சொன்னாராம். சுமார் பதினைந்து கோடிக்கும் மேல் இப்படி கைமாறியிருப்பதாக கிசுகிசுக்கிறது கோடம்பாக்கம்.
இப்போதைக்கு இழந்தது இழந்ததாகவே இருக்கட்டும் என்று நினைக்கிற நயன், மாஸ்டரின் ஸ்டேட்மென்டுகளை பொறுத்துதான் வெளிப்படையாக பேச ஆரம்பிப்பாராம்.
உப்பை கரைச்சு உள் நாக்குல ஊத்துனாலும், சப்புன்னுதான் இருக்கு மாஸ்டரின் பேட்டிகள் எல்லாமே! விஷயம் புரியுதா...
இஷ்டம்
ஆயிரம் காலத்து பயிரான திருமண பந்தத்தை ஏதோ ஆட்டுப் புழுக்கையை போல டீல் பண்ணுகிற ஐ.டி ஜோடிகளின் அவஸ்தைதான் இஷ்டம். ஏற்கனவே வைரஸ் ஃபார்ம் ஆன சிஸ்டம் போல நாலாப்புறத்திலிருந்தும் 'கலாச்சார கேடர்கள்' என்ற நற்பெயரை வாங்கியிருக்கும் இவர்களின் கழுத்தில்தான் இப்படியொரு தங்கப்பதக்கத்தை(?) மாட்டி கவுரவித்திருக்கிறார் புதுமுக இயக்குனர் பிரேம் நிஸார். நூல் பிசகியிருந்தாலும் நம்மை பிசக்கிவிடுவார்கள் என்ற எச்சரிக்கையும் தென்படுகிறது அவரது முடிவில். தப்பித்தார் தம்பிரான்!
சந்தானம் என்கிற பூசாரி இருக்கிற வரை, குறி கேட்க வரும் ரசிகர்களின் கூட்டத்திற்கு பஞ்சம் ஏது? இவரை நம்பியே நகர ஆரம்பிக்கும் படம், ஒரு கட்டத்தில் இவர் இல்லாமலே விறுவிறுப்படைந்ததுதான் ஆச்சர்யம். சரி, கதைக்கு வருவோம்.
லவ் மேரேஜ் ஆகி சில நாட்களுக்குள்ளாகவே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரியும் விமல்- நிஷா அகர்வால் ஜோடி, முறையே ஆளுக்கொரு துணையை தேர்ந்தெடுக்கிறது. தங்கள் பழைய வாழ்க்கையில் ஈ புகுந்த சமாச்சாரத்தை கூட தனது துணையிடம் விடாமல் சொல்லி திறந்த புத்தகமாகிறார்கள் இருவரும். இந்த செகண்ட் ஹேன்ட் டீல் நால்வருக்குமே பிடிக்க, கல்யாணத்தை நோக்கி முன்னேறுகிறார்கள். ரிஜிஸ்தர் ஆபிசில் மறுபடியும் கல்யாணத்திற்காக கூடும் ஜோடிகள் தங்கள் முதல் காதலை மறந்தார்களா, இரண்டாம் திருமணத்தை ஏற்றார்களா என்பதே முழுக்கதை.
மனசுக்குள் ஒட்டிக்கொண்ட களவாணி விமல், இந்த படத்தில் ஐ.டி இளைஞனாக வருகிறார். மீசையில்லாத அவரது முகமும், ததிங்கணத்தோம் போடும் அவரது இங்கிலீஷும், பொசுக்கென்றால் வெளிநாட்டில் ஆடுகிற டூயட்டும் யானையின் அம்பாரியை குதிரைக்கு கட்டிய மாதிரி பொருந்தவே இல்லைதான். இருந்தாலும் அடுத்த கட்ட வளர்ச்சி தேவைப்படுகிறதே அவருக்கு? விமல்-நிஷா காதலில் அப்படியொரு லைவ்! முதல் முத்தத்திற்கு பிறகு தொடரும் அவர்களது 'ப்ரி செக்ஸ்' தைரியமும் அந்த சூழலும் இக்கால இளசுகளுக்கு எச்சரிக்கையா, ஐடியாவா? எதுவாகவும் இருந்து தொலையட்டும்... ஜில்லுன்னுதான் இருக்கு!
புதுமுக வரவுகளில் அண்மைக்கால அசத்தல் இந்த நிஷா. காட்டு காட்டென்று 'காட்டுகிற' விஷயத்தில் நடிப்பும் உள்ளடங்கியிருக்கிறதேய்யா... சபாஷ்.
சந்தானத்திற்கு இப்படியொரு ஸ்திரீ லோலன் அறிமுகமா? அதை படம் முழுக்க கண்ட்டினியூ பண்ணாமல் விட்டுட்டீங்களே டைரக்டர். மற்றபடி கண் போன பிறகு கலர் டிவி வாங்கி என்ன பிரயோஜனம் என்கிற சந்தானத்தின் வழக்கமான அலம்பலுக்கு தியேட்டரே 'ஆஹா'வாகிறது.
விமலின் அம்மாவாக நடித்திருக்கிற பிரணதியும் அவரது சொந்தக்குரலும் அவர் பேசும் 'பொளேர்' வசனங்களும் சற்று நிமர்ந்து அமர வைக்கிறது ரசிகர்களை. அழுத்தமான இந்த அட்வைஸ்கள் திக்குத் தெரியாத இளசுகளை பக்குவாக்கும்!
இப்படத்தின் ஆகப்பெரிய நிம்மதி, வலிய திணிக்கப்பட்ட சண்டைக்காட்சிகள் இல்லை. அவ்வளவு ஏன், சண்டை காட்சியே இல்லை.
இப்படத்தின் மேன் ஆஃப் த மேட்ச், தமன் இல்லை என்பது மட்டும் நிச்சயம்.
இஷ்டம்- விமலுக்கு துரதிருஷ்டம், நிஷா அகர்வாலுக்கு அதிர்ஷ்டம்!
-ஆர்.எஸ்.அந்தணன்
 இந்தியில் செக்ஸியாக :அசினின் கேள்வி!

தமிழ், மலையாளத்தில் நடிப்பதை விட இந்தியில் செக்ஸியாக நடிப்பதாக எழுதுகிற தமிழக நிருபர்களை போனில் அழைத்தாவது டோஸ் விடுகிறார் அசின். யாரோ மும்பையில் எழுதுறாங்க என்பதற்காக நீங்களும் எழுதினா எப்படி என்பதுதான் அசினின் கேள்வி!
டாப்ஸிக்கும் சிம்புவுக்கும் லவ்......
 
டாப்ஸிக்கும் சிம்புவுக்கும் லவ் என்று செய்திகள் கசிய ஆரம்பித்திருக்கிறது. தனுஷ§ம் சிம்புவும் நேரில் பார்த்தால் கூட முகத்தை திருப்பிக் கொண்டு செல்கிற அளவுக்கு திக் எனிமிகள். ஆடுகளத்தில் தனுஷின் ஜோடியே டாப்ஸிதான். 'லபக்'கியதற்கு இதுவும் காரணமோ?